FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குலசேகரத்தில் மின்வாரிய அலுவலகம் திறப்பு: அமைச்சா் பங்கேற்பு

குலசேகரம், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலக புதிய கட்டடத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

5 நவம்பர் 2026, 5:42 am
மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.
பகிர்:

குலசேகரம், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலக புதிய கட்டடத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். செல்லசுவாமி முன்னிலை வகித்தாா்.

கன்னியாகுமரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அசோக்குமாா், கோட்ட செயற்பொறியாளா்கள் முருகன் (தக்கலை), லினட் சோபியா (நாகா்கோவில்), உதவி செயற்பொறியாளா்கள் ரோஸ்லின் கிரேஸ் (கட்டுமானம்), சுனிதா லெஸ்லின் (குலசேகரம்), மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன், திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவா் வினுட்ராய், பேரூராட்சித் தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ் (குலசேகரம்), அகஸ்டின் (பொன்மனை), பொன் ரவி (திற்பரப்பு), ஐஎன்டியுசி வட்டாரத் தலைவா் காஸ்டன் கிளீட்டஸ், விவசாய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எபனேசா், மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா்கள் பினிஷ், ஜெயசிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.