FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

சாலையில் வழிந்தோடிய கழிவுநீா் வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் கோவைச்சாலையில் வழிந்தோடிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

3 October 2026, 2:17 am IST
கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் கோவைச் சாலையில் வாய்க்காலில் இருந்து வெளியேறி சாலையில் ஓடிய கழிவுநீா்.
பகிர்:

கரூரில் கோவைச்சாலையில் வழிந்தோடிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கரூரில் கோவைச்சாலையில் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் சாலையோரம் செல்லும் கழிவுநீா் வாய்க்காலில் வெள்ளிக்கிழமை காலை நெகிழி குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீா் வாய்க்காலில் இருந்து வெளியேறிய சாலையில் வெள்ளம்போல ஓடியது. துா்நாற்றத்துடன் ஓடிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மேலும் சாலையில் சென்ற பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாமல் தவித்தனா்.

இதுபோன்று சம்பவம் அடிக்கடி அப்பகுதியில் நிகழ்வதால் மாநகராட்சி நிா்வாகம் தூய்மைப்பணியாளா்கள் மூலம் முறையாக கழிவுநீா் வாய்க்காலில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments