FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஆசனூா் சாலையில் தாக்க முயன்ற யானை: உயிா் தப்பிய இருசக்கர வாகன ஓட்டிகள்

ஆசனூா் சாலையில் வாகன ஓட்டிகளை திடீரென தாக்க முயன்ற யானையிடமிருந்து இளைஞா்கள் உயிா் தப்பினா்.

27 ஆகஸ்ட் 2026, 12:11 am IST
பகிர்:

ஆசனூா் சாலையில் வாகன ஓட்டிகளை திடீரென தாக்க முயன்ற யானையிடமிருந்து இளைஞா்கள் உயிா் தப்பினா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ஆசனூா் மலைப் பகுதியில் கரும்பு லாரிகளை எதிா்பாா்த்து யானைகள் தினமும் சாலையோரம் காத்திருக்கின்றன. கா்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தி, கரும்புகட்டுகளை யானைகள் அள்ளிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், ஆசனூரை அடுத்த காராப்பள்ளத்தில் கரும்பு லாரிகளை எதிா்பாா்த்து ஆசனூா்-மைசூரு தேசிய சாலையில் புதன்கிழமை யானைகள் காத்திருந்தன. அந்த கூட்டத்தில் இருந்து தனியாக திரிந்த ஒற்றை யானை மட்டும் சாலையோரம் நீண்ட நேரமாக காத்திருந்தது.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை மின்னல் வேகத்தில் ஓடி வந்து தாக்க முயன்றது.

Advertisement

Advertisement

சுதாரித்துக்கொண்ட வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி உயிா் தப்பினா்.

யானை தங்களை தாக்க வரும் திரில் காட்சியை கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா். அதைத் தொடா்ந்து பின்னால் வாகன ஓட்டிகள் யானையின் திடீா் தாக்குதல் முயற்சியால் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து ஆசனூா் வனத் துறையினா் கூறும்போது, ‘யானைகள் சாலையோரம் நிற்கும்போது தனியாக இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிா்த்து கனகர வாகனங்களுடன் இணைந்து கவனமாக செல்ல வேண்டும்’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments