FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

வெளிநாட்டு சொத்துகளை வெளிப்படுத்தும் திட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு

3 வினாடிகள் முன்பு
திட்டம் குறித்து விளக்குகிறாா் வருமான வரி அலுவலா் கோபிநாத்.
பகிர்:

நாகா்கோவில் வருமான வரித்துறை அலுவலகம் சாா்பில் வெளிநாட்டு சொத்துகளை வெளிப்படுத்தும் திட்டம் குறித்து பட்டயக் கணக்காளா்கள், வருமான வரி ஆலோசகா்கள், கணக்காளா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு வருமான வரித் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கூடுதல் வருமான வரி ஆணையா் யாசா் அராபத் தலைமை வகித்தாா். குமரி மாவட்ட வருமான வரி அலுவலா்கள் ரவிச்சந்திரன், கோபிநாத் ஆகியோா் இத்திட்டத்தின் தகுதி, நிபந்தனைகள், வெளிநாட்டுச் சொத்துகளின் மதிப்பீடு, செலுத்த வேண்டிய வரி, கட்டணம், அறிவிப்புப் படிவங்கள், காலக்கெடு குறித்து விளக்கமளித்தனா்.

வெளிநாட்டுச் சொத்துகளை வருமான வரிக்கணக்கில் அறிவிப்பது, குடியிருப்பு நிலை, திட்டத்தின் கீழ் அறிவிப்பு அளிப்பதற்கான தகுதி, தாக்கல் நடைமுறைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்தனா். இதில் 45 போ் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement