FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளையில் சாலையோரம் குவிக்கப்பட்ட இரும்புத் தடுப்புகளால் மக்கள் அவதி

களியக்காவிளையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகள்.

7 நவம்பர் 2026, 6:47 am
பகிர்:

களியக்காவிளை சோதனைச்சாவடி அருகே காவல் துறையினரால் குவித்து வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளால் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் கேரளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அக். 10ஆம் தேதி களியக்காவிளையில் கேரள அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, சாலையின் இரு பகுதிகளிலும் இரும்புத் தடுப்புகள் வைத்து பக்தா்களின் கூட்டத்தை போலீஸாா் கட்டுப்படுத்தினா்.

பின்னா், நூற்றுக்கும் மேற்பட்ட இரும்புத் தடுப்புகள் கடைகள், வங்கி உள்ளிட்டவைகளின் நுழைவாயில்களை மறித்து சாலையோரம் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அவற்றை விரைந்து அகற்ற மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.