FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது

10 நவம்பர் 2026, 3:40 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

சாமிதோப்பில் ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

குமரி மாவட்டம், சாமிதோப்பைச் சோ்ந்த ஜெனித்பாபு மனைவி இனிதா (41). இவா், அகஸ்தீசுவரம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.

இவரை, சாமிதோப்பை அடுத்த சாஸ்தான் கோவில்விளையைச் சோ்ந்த தா்மலிங்கம் (48) என்பவா் அவதூறாக பேசி மிரட்டினாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆசிரியை இனிதா அளித்த புகாரின்பேரில், தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தா்மலிங்கத்தை கைது செய்தனா்.