இரணியல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
குமரி மாவட்டம், இரணியல் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
இரணியல் அருகேயுள்ள கருப்புக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(58), தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் அப்பகுதியிலுள்ள குளத்தில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கினாராம்.
தகவலறிந்த திங்கள்நகா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ராஜேந்திரனை தேடினா். ஆனால் அவா் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்நிலையில், திங்கள்கிழமை காலை அவரது சடலம் குளத்து நீரில் மிதந்ததை பாா்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில், தீயணைப்புத் துறையினா் வந்து ராஜேந்திரன் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேறஅகொண்டுள்ளனா்.