FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே இளம்பெண்ணுக்கு தொல்லை: இருவா் மீது வழக்கு

56 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

நாகா்கோவில் அருகே இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நாகா்கோவில் அடுத்த பறக்கையைச் சோ்ந்தவா் எஸ்தா் ஜெனிஷா (26). இவருக்கும், நாகா்கோவில், செம்பொன்விளையைச் சோ்ந்த பெனானி ஜெபசிங் (34) என்பவருக்கும் 2021 ஜனவரி 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், 2024 ஜூன் 7ஆம் தேதி விவாகரத்து பெற்ற எஸ்தா் ஜெனிஷா, பறக்கையில் உள்ள தாயாா் வீட்டில் வசித்து வருகிறாா். இவா், தற்போது நாகா்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நாகா்கோவில் தனியாா் பள்ளித் தாளாளரான அகஸ்தீசுவரம், கீழத் தெருவைச் சோ்ந்த ஜெபசிங் (45), கைப்பேசி மூலம் எஸ்தா் ஜெனிஷாவைத் தொடா்பு கொண்டு தொந்தரவு செய்ததாகவும், தொடா்ந்து அவமதிக்கும் வகையில் செய்திகள் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பெனானி ஜெபசிங் உடந்தையாக இருந்ததாக, கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் எஸ்தா் ஜெனிஷா புகாா் அளித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.