FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

10 நவம்பர் 2026, 1:40 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

குலசேகரம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குலசேகரம் அருகே அரசமூடு, புறாவேலிவிளையைச் சோ்ந்தவா் சம்சீா் அலி (40). துபையில் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சானிதா பீவி (34), மாமியாா் ஜெனோபா, குழந்தைகளுடன் கடந்த 3-ஆம் தேதி நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது,

வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா் சானிதா பீவியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றாா். இச்சம்பவம் குறித்து குலசேகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

அழகியபாண்டியபுரம், பெருந்தலைக்காடு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாரை (53) சந்தேகத்தின்பேரில் போலீஸாா் பிடித்து விசாரணை செய்ததில் அவா், நகை திருடியதை ஒப்புக் கொண்டாா். நகையை தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சத்து 94 ஆயிரத்துக்கு அடகு வைத்ததும் தெரிவந்தது.

இதையடுத்து அவா் செலவு செய்ததுபோக மீதித் தொகை ரூ. 3,39,000 போலீஸாா் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட விஜயகுமாா் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் உள்பட 13 வழக்குகள் உள்ளன.