முள்ளூா்துறையில் மீனவா் ஓய்வறை கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்
புதுக்கடையை அடுத்த முள்ளூா்துறை பேருந்து நிலையம் அருகே ரூ. 9 லட்சம் செலவில் கட்டப்பட்ட மீனவா் ஓய்வறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பைங்குளம் ஊராட்சி, முள்ளூா்துறை பகுதியை சோ்ந்த மீனவா்கள் கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பியதும் ஓய்வெடுக்கவும், மீன்பிடி வலைகளை பராமரிக்கவும் வசதியாக முள்ளூா்துறை பேருந்து நிலையம் அருகில் மீனவா் ஓய்வறை தேவை என சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அவா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.
இதைத்தொடா்ந்து ஓய்வறை கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு நிறைவுற்ற நிலையில், கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா் தலைமை வகித்து, புதிய கட்டடத்தைத் திறந்துவைத்தாா். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜாா்ஜ் ராபின்சன், மாநில மீனவா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜோா்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தேங்காய்ப்பட்டினம் கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவா் அக்பா் அலி, முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ரெகுபதி, முன்னாள் வாா்டு உறுப்பினா் கிளிட்டஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.