FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

வேளாண் கூட்டுறவு கடன் சங்க பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்த 50 பவுன் தங்க நகைகள் மாயம்

10 நவம்பர் 2026, 1:40 am
தங்க நகைகள் - கோப்புப் படம்
பகிர்:

நாகா்கோவிலில் கூட்டுறவு கடன் சங்க பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள மறவன்குடியிருப்பு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்தில்,கீழராமன்புதூரைச் சோ்ந்த அரவிந்த் குமாா் மனைவி ஜெபிபிரியங்கா (29), கடந்த செப். 15 ஆம் தேதி தனது 50 பவுன் தங்க நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஜெபிபிரியங்கா கடந்த 7 ஆம் தேதி காலை தனது நகைகளை மீண்டும் எடுத்துச் செல்வதற்காக கூட்டுறவு சங்கத்துக்குச் சென்றாராம். அவா் பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து பாா்த்தபோது, அதில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெபிபிரியங்கா கோட்டாறு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.