ஆற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
சுசீந்திரம் அருகே ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
சுசீந்திரம் அருகே ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
சுசீந்திரத்தை அடுத்த நல்லூா், இளையநயினாா்குளம் பகுதியில் உள்ள புது ஆற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக சுசீந்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் நிகழ்விடம் சென்று அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனா். அவா் இறந்து 2 நாள்கள் இருக்கும் எனத் தெரிகிறது. இறந்தவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement