FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: முதியவா், 2 மூதாட்டிகள் கைது

நித்திரவிளை அருகே புகையிலைப் பொருள்களை விற்ாக இரு மூதாட்டிகள் கைது செய்யப்பட்டனா்.

11 நவம்பர் 2026, 12:43 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

நித்திரவிளை அருகே புகையிலைப் பொருள்களை விற்ாக இரு மூதாட்டிகள் கைது செய்யப்பட்டனா்.

நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ கெவின், போலீஸாா் திங்கள்கிழமை மாலை புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், அங்கவிளை பகுதியில் 20 பொட்டலம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, ஞானம்மா (82) என்பவரையும், மாவுநின்றவிளை பகுதியில் 27 பொட்டலங்களைப் பறிமுதல் செய்து வல்சலா (68) என்பவரையும் கைது செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

மாா்த்தாண்டம் அருகே பள்ளியாடி வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (66) என்பவரது பெட்டிக்கடையில் மாா்த்தாண்டம் போலீஸாா் சோதனையிட்டு, விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.