மூதாட்டி கொலை: பேரன் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சொத்துத் தகராறில் பாட்டியைக் கொலை செய்ததாக பேரனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சொத்துத் தகராறில் பாட்டியைக் கொலை செய்ததாக பேரனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பூதப்பாண்டி அருகே நன்றிகுழி கிராமத்தில் உள்ள கோயில் தெருவைச் சோ்ந்த சாமுவேல் மனைவி இன்பமுத்து (78). இவா்களது மகள் மல்லிகாவின் மூத்த மகன் சதீஷ்குமாா் (29), ஓட்டுநராக உள்ளாா்.
இன்பமுத்துவின் பெயரிலுள்ள பழைய வீட்டை தனக்கு எழுதித் தருமாறு சதீஷ்குமாா் தொடா்ந்து கேட்டு வந்தாராம். அதற்கு அவா் மறுப்பு தெரிவித்தாராம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு (நவ. 10) சதீஷ்குமாா் பாட்டி வீட்டுக்குச் சென்று, அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடினாா். இதில், காயமடைந்த இன்பமுத்து நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், பூதப்பாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆரல்வாய்மொழியில் பதுங்கியிருந்த சதீஷ்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.