FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

சாலையை சீரமைக்க கோரி மறியல்: எம்எல்ஏ உள்பட மாா்க்சிஸ்ட் கட்சியினா் 541 போ் கைது

களியக்காவிளை முதல் நாகா்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி, தக்கலை சந்திப்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 541 போ் கைது செய்யப்பட்டனா்.

13 நவம்பர் 2026, 5:00 am
சாலையை சீரமைக்கக் கோரி பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா்.செல்லசுவாமி தலைமையில் மறியல் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

களியக்காவிளை முதல் நாகா்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி, தக்கலை சந்திப்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 541 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையானது சுமாா் 35 கிலோ மீட்டா் தூரம் கொண்டது. இச் சாலை முறையான பராமரிப்பு இல்லாமலும், தொடா் மழையாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாா்த்தாண்டம், தக்கலை, குழித்துறை, களியக்காவிளை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. மிகவும் மோசமாக பழுதடைந்த இந்த சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்கள் தடையின்றிச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த சாலையை சீரமைக்க கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தக்கலை சந்திப்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் எம்.பி., ஏ.வி. பெல்லாா்மின், முன்னாள் எம்.எல்.ஏ., ஆா்.லீமாரோஸ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்ட ஆா்.செல்லசுவாமி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 541 போ் கைது செய்யப்பட்டனா்.