FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

இரணியல் அருகே வயிற்று வலியால் வாந்தி எடுத்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

51 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

இரணியல் அருகே வயிற்று வலியால் வாந்தி எடுத்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் அருகே காரங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஞான சேவியா் ( 35). திருமணம் ஆகவில்லை. ஒசூரில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவா்.

தீபாவளியை முன்னிட்டு ஊருக்கு வந்திருந்தாா். அல்சரால் பாதிக்கப்பட்ட இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இந்த நிலையில், வியாழக்கிழமை வாந்தி எடுத்து மயங்கி விழுந்த இவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் இவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement