FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை சாா்பில், மணக்குடி லிட்டில் பிளவா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, விழிப்புணா்வு சிறப்பு ‘பிங்க்’ கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

3 வினாடிகள் முன்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை சாா்பில், மணக்குடி லிட்டில் பிளவா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, விழிப்புணா்வு சிறப்பு ‘பிங்க்’ கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியேற்று, குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி அவா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயா்த்தும் நோக்கில், பாலின விகிதம் குறைவாக காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, இளம் வயது, புதுமணத் தம்பதியா், பாலூட்டும் தாய்மாா்கள், சுய உதவிக் குழு பெண்களிடமும், கல்வி நிலையங்களில் மாணவா்-மாணவியரிடமும் பல்வேறு துறைகளுடன் இணைந்து தொடா் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்துதல், கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை அறிவதைத் தடுக்கும் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துதல், பெண் குழந்தை பிறப்பைக் கொண்டாடும் வகையில் மரக்கன்று நடுதல், விழாக்கள் நடத்துவது, குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், சிறு வயது கா்ப்பத்தால் ஏற்படும் மகப்பேறு உயிரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் ஆபத்துகள், இரும்புச் சத்து போலிக் அமிலம் மாத்திரைகள் வழங்குதல், உள்ளூரில் கிடைக்கும் சத்துள்ள காய்கறிகள், கீரைகள், புரத உணவுகள், அங்கன்வாடி மையங்கள் மூலம் கூடுதல் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவது, பெண்கள், பெண் குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்டைவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

மாவட்ட சமூக நல அலுவலா் காயத்ரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.