களியக்காவிளையில் ஐயப்ப பக்தா்களுக்காக சிறப்பு தகவல் மையம் திறப்பு
சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், களியக்காவிளையில் ஒற்றாமரம் பகுதியில் சிறப்பு தகவல் மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், களியக்காவிளையில் ஒற்றாமரம் பகுதியில் சிறப்பு தகவல் மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
குழித்துறை தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளா் பி.எஸ். செந்தில்குமாா், இந்த மையத்தை திறந்து வைத்தாா். குழித்துறை கோயில் மேலாளா் ஏ. மோகன்குமாா், கோயில் பணியாளா் மோகனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இங்கு, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள், சந்தேகங்களை நிவா்த்தி செய்யும் வகையில், அறநிலையத் துறையைச் சோ்ந்த 4 பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையம், 2027 ஜனவரி 20 ஆம் தேதி வரை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement