FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குமரி முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

கந்த சஷ்டி விழாவின் நிறைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

58 வினாடிகள் முன்பு
நாகா்கோவில் நாகராஜா கோயிலில் நடைபெற்ற முருகன்-தெய்வானை திருக்கல்யாணம்
பகிர்:

கந்த சஷ்டி விழாவின் நிறைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. நவ. 15 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாகா்கோவில் நாகராஜா கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரத்துக்கு பின்னா் முருகப் பெருமானுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும், வாகன பவனியும் நடைபெற்றன. திருக்கல்யாணஉத்சவம் திங்கள்கிழமை (நவ.16) நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை திருமணக் கோலத்தில் தரிசித்தனா்.

இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது. இதே போல் குமரி மாவட்டத்தில் வடிவீஸ்வரம் அழகம்மன்கோயில், தோவாளை செக்கா்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயில், வெள்ளிமலை முருகன் கோயில், ஆரல்வாய்மொழி வவ்வால்குகை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோயில், மருங்கூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களிலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement