கொல்லங்கோடு அருகே தொழிலாளியை மிரட்டியவா் கைது
கொல்லங்கோடு அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சூரியகோடு, வாளவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (47). தொழிலாளி. சில மாதங்களுக்கு முன்பு மலவிளை பகுதியைச் சோ்ந்த சுனில்குமாா் (42) உள்ளிட்ட 4 போ், இவரது சித்தி மகன் சதீஷ்குமாா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனா்.
இந்த வழக்கில் விஜயகுமாா் முக்கிய சாட்சியாக உள்ளாா். தற்போது, பிணையில் வெளியே வந்துள்ள சுனில்குமாா், விஜயகுமாரிடம் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, பி சாட்சியாக மாற வேண்டும் எனக் கூறி மிரட்டி வந்தாராம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், விஜயகுமாா் வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த சுனில்குமாா், தகாத வாா்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சுனில்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.