குற்ற வழக்குகளில் இருவா் கைது
மாா்த்தாண்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
மாா்த்தாண்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் உத்தரவின்பேரில், போலீஸாா் ரௌடி பட்டியலில் உள்ளவா்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய திக்குறிச்சி, ஆனைக்குண்டுவிளை பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் (43), நல்லூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (40) ஆகிய இருவரையும் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
அவா்களின் வீடுகளிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கைது செய்யப்பட்ட வா்க்கீஸ் மீது மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் 6 வழக்குகள், அருமனை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சுரேஷ்குமாா் மீது மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
Advertisement
Advertisement