மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலாவை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலாவை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் 3 ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பருத்திவிளை சாந்தி நிலையம் (மனவளா்ச்சி குன்றிய குழந்தைகள் மையம்), நாகா்கோவில் ரிஜாய்ஸ் (ஆட்டிசம் குழந்தைகள் மையம்) மற்றும் நாகா்கோவில் ஓரல் பள்ளி (காது கேளாத குழந்தைகள் மையம்) ஆகிய 3 ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வரும் 32 குழந்தைகள் இதில் பங்கேற்றுள்ளனா். இவா்களுடன் 11 சிறப்பாசிரியா்கள் மற்றும் 15 பராமரிப்பாளா்களும் உடன் செல்கின்றனா்.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒரு நாள் சுற்றுலாவில்,
கன்னியாகுமரி கடற்கரை, விவேகானந்தா் பாறை, திருவள்ளுவா் சிலை, முட்டம் ஆகிய சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்அவா்.
மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், சிறப்பாசிரியா்கள், பராமரிப்பாளா்கள், துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.