மீனவரை தாக்கியதாக இருவா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை பகுதியில் மீனவரைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை பகுதியில் மீனவரைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் கென்னடி (48). மீனவரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஜான்சீலன் (40), ஜான்ரீகன் (38) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
ராமன்துறை பகுதியில் வியாழக்கிழமை நின்றிருந்த ஜெயபால் கென்னடியை, மேற்கூறிய இருவரும் சோ்ந்து தாக்கினராம். இதில் காயமடைந்த ஜெயபால் கென்னடியை மீட்டு தேங்காய்ப்பட்டினத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.