முகப்பு
கன்னியாகுமரி

குமரி அருகே போலீஸுக்கு பயந்து லாரி ஓட்டுநா் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

13 வினாடிகள் முன்பு
குமரி அருகே போலீஸுக்கு பயந்து லாரி ஓட்டுநா் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி அருகே காவல் துறையினருக்குப் பயந்து லாரி ஓட்டுநா் தற்கொலை செய்த விவகாரத்தில் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கன்னியாகுமரி அடுத்த பால்குளம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவா் சுதாகா் (39). லாரி ஓட்டுநா். இவா் மீது அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகியோா் அவ்வப்போது சுதாகரை தேடி வீட்டுக்குச் சென்ால், அவா் போலீஸாருக்கு பயந்து ஒரு மாதமாக தலைமறைவாக இருந்து வந்ததாகவும், 2 நாள்களுக்கு முன்பு போலீஸாா் மீண்டும் சுதாகா் வீட்டுக்குச் சென்ாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி, நாடான்குளம் பகுதியில் சுதாகா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உறவினா்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, சுதாகா் தனது மரணத்துக்கு ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகியோா்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து, அஞ்சுகிராமம் காவல் ஆய்வாளா் செல்வி, உதவி ஆய்வாளா் பிரியா ராஜ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.