பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பளுகல் அருகே செறுவல்லூா், கோட்டுக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியதாஸ். இவரது மனைவி செல்வி (46). தொழிலாளிகளான இருவரும் அப்பகுதியில் உள்ள தோட்டப் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தனா்.
பின்னா், வீடு திரும்பியபோது பின்பக்க கதவு திறக்கப்பட்டு, வீட்டு அலமாரியில் இருந்த 5 கிராம் தங்க நகை, ரூ. 1,350 ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து செல்வி அளித்த புகாரின்பேரில், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.