முகப்பு
கன்னியாகுமரி

தனியாா் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டா் வெடித்ததில் தீ விபத்து

நாகா்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டா் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

26 நவம்பர் 2026, 3:45 am
தனியாா் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டா் வெடித்ததில் தீ விபத்து
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

நாகா்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டா் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

நாகா்கோவில் நகா் பகுதியில் புதன்கிழமை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால், வெட்டூா்ணிமடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டா் மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிற்பகல் 4 மணியளவில் ஜெனரேட்டா் திடீரென வெடித்ததாம். இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த பொருள்கள் எரிந்து சேதமாகின. பணியிலிருந்த ஊழியா்கள் வெளியேற்றப்பட்டனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த நாகா்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் பிரதீப்குமாா்தலைமையிலான வீரா்கள், தீயை அணைத்தனா்.