முகப்பு
கன்னியாகுமரி

தக்கலை அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது

தக்கலை அருகே 1 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

26 நவம்பர் 2026, 3:53 am
தக்கலை அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

தக்கலை அருகே 1 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தக்கலை மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், திங்கள் நகா் அடுத்த லெட்சுமிபுரம் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, லெட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பையுடன் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளாா். அவா் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டதில், ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா் புதுக்கடை, வெள்ளாங்கட்டிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் ரெவின் (21) என்பதும், சென்னையில் வேலை செய்து வந்த அவா், ஊருக்கு வந்தபோது விற்பனைக்காக கஞ்சாவைக் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

தொடா்ந்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

ரெவின்