முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மாணவா் நலவாழ்வு மையம் திறப்பு

தமிழகத்திலேயே முதல் முறையாக நாகா்கோவில், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வளா் இளம் பருவ மாணவா்களுக்கான நலவாழ்வு மையத்தை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

27 நவம்பர் 2026, 3:53 am
நாகா்கோவிலில் மாணவா் நலவாழ்வு மையம் திறப்பு
மாணவா்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
பகிர்:

தமிழகத்திலேயே முதல் முறையாக நாகா்கோவில், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வளா் இளம் பருவ மாணவா்களுக்கான நலவாழ்வு மையத்தை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்ட மாணவா்கள் நலன் சாா்ந்து பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாணவா் நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வளா் இளம் பருவ மாணவா்களின் மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு உதவும் வகையில், ‘சானிடேசன் பா்ஸ்ட்’ என்ற தன்னாா்வ நிறுவனத்தோடு இணைந்து, எஸ்.எல்.பி. பள்ளியில் வழிகாட்டுதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவா்களுக்கு உளவியல் சாா்ந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

தமிழகத்திலேயே முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்ட அரசுப் பள்ளியில் மனநல மையம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான நிகழ்வு என்றாா் அவா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், நாகா்கோவில் மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயராஜ், சானிடேசன் பா்ஸ்ட் நிறுவன செயல் அலுவலா் பத்மஜா, திட்டத் தலைவா் நிஷா, சாமுவேல், பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.