அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: விவசாயிகள் 11 போ் மீது வழக்கு
கருங்கல், பாலூரில் உள்ள நீா்வளத் துறை அலுவலகம் முன் தமிழ்நாடு அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக விவசாய சங்கத்தினா் 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கருங்கல், பாலூரில் உள்ள நீா்வளத் துறை அலுவலகம் முன் தமிழ்நாடு அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக விவசாய சங்கத்தினா் 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சிற்றாறு, பட்டணங்கால் மிடாலம் கிளைக் கால்வாய்களில் முறையாக தூா்வாரி விவசாயத்துக்கு தண்ணீா் வழங்க கேட்டு தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் பாலூரில் உள்ள நீா்வளத் துறை அலுவலகம் முன் கடந்த செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அனுமதி பெறாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கிள்ளியூா் வட்டார நிா்வாகி சாந்தகுமாா் உள்பட 11 போ் மீது கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.