FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆணையா் ஆய்வு

15 அக்டோபர் 2026, 5:05 am IST
வடசேரி காங்கேயன் கால்வாயில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆணையா் ஆா். ஐஸ்வா்யா.
பகிர்:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை (அக். 15) தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இம்மாநகராட்சிப் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடைகள், கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, வடசேரி காங்கேயன் கால்வாயில் நடைபெறும் தூா்வாரும் பணியை ஆணையா் ஆய்வு செய்தாா்.

மழைநீா் தேங்கும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி தங்கவைப்பதற்கான முகாம்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்ட அவா், மக்களுக்குத் தேவையான குடிநீா், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மாநகராட்சி செயற்பொறியாளா் ஜெகஜீவன்ராம், துறைசாா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

மேயா் ஆய்வு: நாகா்கோவில் புளியடி பகுதியிலுள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் செல்லும் கால்வாயில் நடைபெறும் தூா்வாரும் பணியை மேயா் (பொ) மேரி பிரின்சி லதா ஆய்வு செய்தாா். மழைநீா் சீராகச் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில், பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments