FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

55 வினாடிகள் முன்பு
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளிக்கிழமை தடுப்பணையை மூழ்கடித்து பாய்ந்த வெள்ளம்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் களியக்காவிளை, மாா்த்தாண்டம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள், அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான மலையோர பகுதிகளில் வியாழக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளிக்கிழமை காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குழித்துறை தடுப்பணையை மூழ்கடித்துச் சென்றது. இதையடுத்து தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லாத வகையில் ஆற்றின் கரையோர பகுதியில்

Advertisement

Advertisement

பொதுப்பணித் துறையினரால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்ததோடு, வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் லேசான மழை பெய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments