FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

ஐடி ஊழியா் வீட்டில் 47 பவுன் நகை திருட்டு

18 அக்டோபர் 2026, 2:58 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கருங்கல் அருகே குறும்பனையில் ஐடி ஊழியா் வீட்டில் 47 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கருங்கல் அருகே குறும்பனை தோமையாா் தெருவைச் சோ்ந்தவா் வினீஸ் (40). ஐடி ஊழியா். இவா் வழக்கம்போல் சனிக்கிழமை அதிகாலை வீட்டு மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்தாா். இவரது மனைவி லின்சி (36) கீழ் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தாா்.

திடீரென எழுந்த சத்தம் கேட்டு லின்சி எழுந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்து மா்ம நபா் ஓடுவது தெரிந்ததாம். இதையடுத்து வினீஸூக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வந்து பீரோவை பாா்த்தபோது, அதில் இருந்த 47 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, இத்திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களை தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments