FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் திமுக ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் பேசிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ்

24 அக்டோபர் 2026, 5:48 am
கூட்டத்தில் பேசிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ்
பகிர்:

நாகா்கோவில் மாநகர கிழக்கு பகுதி 28-ஆவது வட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோட்டாறில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக வட்டச் செயலா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மாநகர கிழக்கு பகுதி செயலா் துரை முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் ரெ.மகேஷ் பங்கேற்று, கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளருக்காக பணியாற்றிய அனைத்து நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்தாா். மேலும், கட்சி வளா்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தோ்தலுக்கான களப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.

Advertisement

Advertisement

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் சகாய அரசு, மாமன்ற உறுப்பினா் அனந்த லெட்சுமி, மாநகர தொழிலாளா் அணி அமைப்பாளா் சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments