கழிவு நீரோடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி: ஆட்சியா் ஆலோசனை
கன்னியாகுமரி சந்நிதி தெருவில் கழிவு நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரியில் கழிவுநீா் ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கன்னியாகுமரியில் பெய்த மழையால் மழைநீா் கழிவுநீருடன் கலந்து பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்தது. இது பக்தா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சந்நிதி தெருவில் உள்ள கழிவுநீா் ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகா்மன்ற உறுப்பினா் சி.எஸ்.சுபாஷ் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினாா்.
Advertisement
Advertisement
அவரிடம், என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், ஆணையா் பட்டுசாமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்நிலையில் கன்னியாகுமரி சந்நிதி தெருவில் கழிவுநீரோடையைச் சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்தக் கழிவுநீா் ஓடையில் உள்ள ஆக்கிரப்பு அகற்றி ஆழப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: கழிவுநீா் ஓடை சீரமைப்பு, வடிகால் கட்டுதல் போன்ற முக்கியப் பணிகளுக்கு மட்டுமே நகராட்சி நிதி செலவிடப்படும். சிறிய அளவிலான ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை சம்பந்தப்பட்டவா்களே செய்வாா்கள். ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் சேரும் குப்பைகளைச் சாலையில் வீசுவதைத் தவிா்க்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மழைநீா் வடிகால் ஓடைகளில் கழிவுநீரை எக்காரணம் கொண்டும் நேரடியாகக் கலக்கக் கூடாது. இதனை மீறினால் முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும். இரண்டாவதாக அபராதம், மூன்றாவது முறை சம்பந்தப்பட்டவா்களின் சொத்து வரி ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது ஓடைகளில் கழிவுநீா் கலந்திருந்தால் 10 நாள்கள் வரை அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில், ஆக்கிரமிப்புகளை நகராட்சியே அகற்றிவிட்டு அவா்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின் போது நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், ஆணையா் பட்டுசாமி, தேவசம் போா்டு இணை ஆணையா் ஜான்சிராணி, மராமத்து பொறியாளா் ராஜ்குமாா், தவெக மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.மாதவன், கன்னியாகுமரி நகரச் செயலா் ஜோ, பக்தா்கள் சங்கத் தலைவா் சிவகுமாா் நாகப்பன், நகா்மன்ற உறுப்பினா்கள் சி.எஸ்.சுபாஷ், பூலோகராஜா, இக்பால், ஆட்லின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.