கனிம வள கடத்தல்: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வள கடத்தல் வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வள கடத்தல் வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
அஞ்சுகிராமம் காவல் சரகப் பகுதியில் கனிமவள கடத்தலில் ஈடுபட்டதாக வாரீயூா் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் சாமிகண்ணு (50), திருநெல்வேலி மாவட்டம், பெருங்குடி, லெப்பைக்குடியிருப்பு செம்புலிங்கம் மகன் முத்துக்குமாா்(52), ராதாபுரம் வட்டம் லெவிஞ்சிபுரம் இயேசுநேசன் மகன் தேவசகாயம் (55) ஆகியோா் மீது அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப்பதிந்து கைது செய்திருந்தனா்.
இவா்கள் தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனராம்.
Advertisement
Advertisement
இதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவுப்படி, மேற்கூறிய 3 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.