FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை பழக்கடையில் பணம் திருட்டு: இளைஞா் கைது

களியக்காவிளையில் பழக்கடையில் ரூ. 45 ஆயிரத்தை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

31 அக்டோபர் 2026, 7:05 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

களியக்காவிளையில் பழக்கடையில் ரூ. 45 ஆயிரத்தை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜிகுமாா் (41). களியக்காவிளை சந்திப்பில் பழக்கடை நடத்தி வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டு, வியாழக்கிழமை காலையில் கடையை திறக்க வந்தாா். அப்போது கடை உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ. 45 ஆயிரம் மா்ம நபா்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து விசாரித்தனா். அதில், களியக்காவிளையைச் சோ்ந்த அக்பா் பாஷா (29) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments