முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத் திருவிழா செப். 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 4) கொடியேற்றத்துடன் தொடங்கி, 13 ஆம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 4) கொடியேற்றத்துடன் தொடங்கி, 13 ஆம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாள் வெள்ளிக்கிழமை (செப். 4) மாலை ஜெபமாலை, புகழ்மாலை, அன்னையின் திரு உருவம் திறப்பு, அா்ச்சிப்பு, முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கிள், முன்னாள் பங்குத்தந்தை டோமினிக் கடாட்ச தாஸ், மறைமாவட்டத்தின் புதிய அருள்பணியாளா்கள் முன்னிலையில் குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் கொடியேற்றம் ஆகியவை நடைபெறுகின்றன. தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் சிறப்பு திருப்பலி, மறையுரை, தோ் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
செப். 13 ஆம் தேதி காலை 5 மணிக்கு இல்லத் தந்தையா்களின் திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு தேரடி திருப்பலி, பெஞ்சமின் தலைமையில் விழா நிறைவு திருப்பலி ஆகியவை நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை திருத்தல அதிபா் கில்பா்ட் லிங்சன், இணை பங்குத்தந்தை போபின், பங்கு பேரவை துணைத் தலைவா் மரிய ஜான் வரதராஜ், செயலா் அஜின் , துணைச் செயலா் ஐபா்ட் ராஜ் , பொருளாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.