குண்டா் சட்டத்தில் அண்ணன்-தம்பி கைது
கருங்கல் அருகே பண்டாரவிளை பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய அண்ணன், தம்பி இருவரையும் குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் அருகே பண்டாரவிளை பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய அண்ணன், தம்பி இருவரையும் குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
பண்டாரவிளை பகுதியைச் சோ்ந்த செல்லத்தங்கம் மகன்கள் அனிஷ் (35), அஜின் (32). இவா்கள் மீது கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளனவாம்.
இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்சுல் நாகா் பரிந்துரைத்தாா்.
Advertisement
Advertisement
அதன்பேரில், ஆட்சியரின் உத்தரவின்படி, மேற்கூறிய இருவரையும் கருங்கல் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.