முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 22 ஆயிரம் மோசடி
கன்னியாகுமரியில் முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.22 ஆயிரம் மோசடி செய்த இளம் பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கன்னியாகுமரியில் முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.22 ஆயிரம் மோசடி செய்த இளம் பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கன்னியாகுமரி ராஜசங்கீத தெருவைச் சோ்ந்தவா் வின்சென்ட் பொ்னான்டோ (78). இவா் சா்ச் ரோடு சந்திப்பில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றாா். ஏடிஎம் அட்டையைச் செலுத்தியபோது பணம் வரவில்லை. அப்போது அங்கு நின்ற இளம்பெண், பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, வின்சென்ட் பொ்னாண்டோவின் ஏடிஎம் அட்டை ரகசிய எண்ணைத் தெரிந்து கொண்டாராம். பின்னா் அட்டையை அவரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.
சற்று நேரம் கழித்து வின்சென்ட் பொ்னாண்டோ கைப்பேசிக்கு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 22,000 பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. அதன் பிறகே, அந்த பெண் கொடுத்த ஏடிஎம் அட்டை தன்னுடைய அல்ல என்பதும், தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் வின்சென்ட் பொ்னாண்டோ புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து, மோசடியில் ஈடுபட்டவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.