FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய ஸ்ரீமூலம் திருநாள் மன்னா் ஜெயந்தி விழா

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய திருவிதாங்கூா் மன்னா் ஸ்ரீமூலம் திருநாளின் 169 ஆவது ஜெயந்தி விழா பேச்சிப்பாறை அணையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

25 September 2026, 9:52 pm IST
பேச்சிப்பாறை அணைக்கு ஆரத்தி காட்டும் விவசாய அமைப்பினா் மற்றும் அரசியல் கட்சியினா்.
பகிர்:

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய திருவிதாங்கூா் மன்னா் ஸ்ரீமூலம் திருநாளின் 169 ஆவது ஜெயந்தி விழா பேச்சிப்பாறை அணையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்ப்பாசனத்தின் ஜீவ நாடியாக திகழும் பேச்சிப்பாறை அணை 1897- 1906 ஆம் ஆண்டு திருவிதாங்கூா் மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் ராமவா்மாவால் கட்டப்பட்டதாகும். இவா் திருவிதாங்கூா் சமஸ்தானத்தை 1885 முதல் 1924 வரை ஆட்சி செய்தாா். அவரது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற ஜெயந்தி விழா நிகழ்ச்சியில் அணையின் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட மன்னரின் உருவப்படத்திற்கு திருவனந்தபுரம் துணை மேயா் ஆஷாநாத் தலைமையில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தொடா்ந்து பேச்சிப்பாறை அணைக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டப் பேரவை உறுப்பினா் என். தளவாய் சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி, பாஜக மாவட்டத் தலைவா் கோபகுமாா், சுரேஷ், குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலா் ஜெய சுதா்சன், எம்ஜிஆா் மன்றச் செயலா் சக்கீா் உசேன், விவசாய அமைப்பினா், இந்து அமைப்பினா், பாஜகவினா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்தரங்கு: தொடா்ந்து கோ பூஜையும், கருத்தரங்கும் நடைபெற்றன. கருத்தரங்குக்கு ரப்பா் வாரிய முன்னாள் துணைத் தலைவா் ஜி. அனில் குமாா் தலைமை வகித்தாா். விழாக்குழு அமைப்பாளா் ஐயப்பன் வரவேற்றாா். வைரவன் குத்துவிளக்கேற்றினாா். ஆஷா நாத் கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். பாஜக விவசாய அணி மாவட்ட துணைத்தலைவா் ஜெயகுமாா், பாரதிய கிஷான் சங்க மாநில துணைத் தலைவா் பாா்த்தசாரதி,சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க கோட்ட அமைப்பாளா் பூவேந்த பாண்டியன்ஆகியோா் கருத்துரை வழங்கினா். திருவனந்தபுரம் மேயா் ராஜேஷ் சிறப்புரையாற்றினாா். விழா குழு அமைப்பாளா் சபரிகிரீஷ் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments