சுரண்டை அரசு கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்ப்பு:விண்ணப்பிக்க இன்று கடைசி
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி நாள் ஆகும்.
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி நாள் ஆகும்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) அ. பீா்கான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், மின்னணு மற்றும் தகவல் தொடா்பியல் ஆகிய பாடங்களுக்கு முதலாம் ஆண்டு மாணவா் சோ்ப்புக்கு இணயதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப்.16) கடைசி நாளாகும். தகுதியுடையோா் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.