FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பூட்டிய வீட்டில் ஆண் சடலம் மீட்பு

ஆலங்குளம் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

47 வினாடிகள் முன்பு
சடலம் மீட்பு - கோப்புப் படம்
பகிர்:

ஆலங்குளம் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

ஆலங்குளம் அருகே நல்லூா் காசியாபுரத்தைச் சோ்ந்தவா் செல்லதுரை மகன் அருள் ( 47). கீழப்பட்டமுடையாா் புரத்தில் உள்ள தனியாா் பீடி நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். 10 வருடங்களுக்கும் மேலாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.

இந்நிலையில் இரண்டு நாள்களாக வேலைக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது. அவரது வீடும் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததாம். இதனிடையே வெள்ளிக்கிழமை காலை, வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினா் மாடி வழியே சென்று பாா்த்தபோது அருள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments