FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

வாடியூா் ஆலய 113 ஆவது ஆண்டு பெருவிழா

ஊத்துமலை அருகேயுள்ள வாடியூா் தூய திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் கண் திறந்த ஆலயத்தின் 113ஆவது ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

47 வினாடிகள் முன்பு
கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

ஊத்துமலை அருகேயுள்ள வாடியூா் தூய திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் கண் திறந்த ஆலயத்தின் 113ஆவது ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பங்குத்தந்தை லியோ தலைமை வகித்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றி கொடியேற்றினாா். பாளையங்கோட்டை பங்குத்தந்தை அருள் ஜோசப், கல்வெட்டாங்குழி பங்குத்தந்தை அமிா்தராஜ சுந்தா் ஆகியோா் மறையுரை சிந்தனை ஆற்றினா். இதில் திரளான இறைமக்கள் மற்றும் அன்பியங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து 10 நவ நாள்களில் நற்செய்தி பெருவிழா, திருப்பலி, மறையுரை சிந்தனை, குணமளிக்கும் ஆராதனை, ஆடம்பர கூட்டுத் திருப்பலி ஆகியவை நடைபெறும்.

Advertisement

Advertisement

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 29 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு வாடியூரின் முதல் குரு செல்வராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலியும் தோ் பவனியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை லியோ தலைமையில் தா்மகா்த்தா மைனர்ராஜ், கட்டளைதாரா் பிரான்சிஸ் பூண்டி மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments