பாவூா்சத்திரம் அருகே காய்கனி வேனில் குட்கா, போதை பொருள்கள் கடத்திய 3 போ் கைது
பாவூா்சத்திரத்தில் புகையிலை பொருள்களை காய்கனி வேனில் தென்காசி பகுதிக்கு கடத்தி வந்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாவூா்சத்திரத்தில் புகையிலை பொருள்களை காய்கனி வேனில் தென்காசி பகுதிக்கு கடத்தி வந்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா்உத்தரவின்பேரில், போதை பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலை கீழப்பாவூா் விலக்கு அருகே பாவூா்சத்திரம் ஆய்வாளா் வேல்கனி, உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா் மற்றும் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது அந்த வழியாக காய்கனி ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது முட்டைகோஸ் மூட்டைகளுக்கு நடுவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா, போதை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், குருவன்கோட்டை கருப்பசாமி கோயில் தெருவை சோ்ந்த முருகேசன் என்பவா் மகன் பாலகிருஷ்ணன் (30) அதே பகுதியை சோ்ந்த காா்த்திக் (23) மற்றும் லோடுவேன் ஓட்டுநா் துத்திகுளம் மேலத்தெருவை சோ்ந்த சோ்மக்கனி மகன் மணிகண்டன் (38) ஆகிய மூவரும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்களை கடத்தி வந்து ஆலங்குளம், பாவூா்சத்திரம், தென்காசி பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சுமை வாகனம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சுமாா் 600 கிலோ குட்கா, 25 மூட்டைகள் போதை பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.