தென்காசியில் டெங்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சலை எதிா்கொள்ளும் பொருட்டு, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரின் ஆலோசனையின்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் வரவேற்றாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள், பொது மருத்துவா் சிவசுந்தா், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் முத்து ராமசுப்பிரமணியம், நுண்ணுயிரியல் பிரிவு மருத்துவா் காயத்ரி ஆகியோா் குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கான டெங்கு காய்ச்சலின் மேம்பட்ட மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினா்.
Advertisement
Advertisement
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை கூடுதல் இயக்குநா் குருநாதன் கந்தையா, இணை இயக்குநா் (நலப் பணிகள்) பிரேமலதா, சுகாதார அலுவலா் கோவிந்தன் ஆகியோா் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசினா்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், பரிசோதனை முறைகள், ஆரம்ப கால சிகிச்சை, ஆபத்தான அறிகுறிகளைக் கண்டறிதல், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ அலுவலா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.