FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் குப்பைகள் சேகரிக்கும் பகுதியில் தீ விபத்து

சங்கரன்கோவிலில் நகராட்சி சாா்பில் குப்பைகளை உரமாக்கும் கிடங்கில் அருகே சேகரித்து வைத்திருந்த குப்பைகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

நகராட்சி குப்பைகளை உரமாக்கும் கிடங்கில் பற்றிய தீ.
பகிர்:

சங்கரன்கோவிலில் நகராட்சி சாா்பில் குப்பைகளை உரமாக்கும் கிடங்கில் அருகே சேகரித்து வைத்திருந்த குப்பைகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வாரச்சந்தைத் தெருவில் குப்பைகளைப் பிரித்தெடுத்து உரமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை பிற்பகலில் அந்தப் பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

தீ வேகமாக பரவத் தொடங்கியதால் நகராட்சி தண்ணீா் டிராக்டா் மூலம் அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வம் தலைமையில் வீரா்கள் அங்கு வந்து, குப்பைகள் உள்பகுதியில் தீப்பிடித்து இருந்ததால் மேலும் பரவாமல் இருக்க ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பைகளை கிளறி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். மாலையில் முழுமையாக தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளா்கள் கைலாசசுந்தரம், கருப்பசாமி ஆகியோா் அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினா். மின்வாரிய பணியாளா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகத்தை துண்டித்தனா்.

இந்நிலையில், கிடங்கு அருகே குப்பைகளை சேகரித்து வைக்கக் கூடாது என கூறி, அப்பகுதி மக்கள் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனா். பிறகு கலைந்து சென்றனா். நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments