FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணி: விரைந்து முடிக்க கோரி அமைச்சரிடம் மனு

பாவூா்சத்திரம், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சருமான வி.கே. ராஜீவ்விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 15 ஜூலை 2026, 2:25 am IST
தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சா் வி.கே. ராஜீவ்விடம் கோரிக்கை மனு அளிக்கும் தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினா் பாண்டியராஜா.
பகிர்:

பாவூா்சத்திரம், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சருமான வி.கே. ராஜீவ்விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினா் பாண்டியராஜா அமைச்சா் ராஜீவ்விடம் அளித்த கோரிக்கை மனு:

தென்காசி நகரின் அடையாளமாக விளங்கும் அருள்மிகு காசி விஸ்வநாதா் திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது காா்கள், பிற வாகனங்களை நிறுத்த பாா்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இக்கோயிலுக்கு காா் பாா்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

Advertisement

Advertisement

பாவூா்சத்திரம், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ரயில்வே துறை வசமிருந்து ஒப்புதல்கள் கிடைக்காததால் மேம்பால பணிகளை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ரயில்வே துறையிடம் கலந்து பேசி இரு மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின்போது தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்சித் சிங், தென்காசி எம்எல்ஏ கலைகதிரவன், தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலா் ராஜ பிரகாஷ் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments