FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பகுதியில் சோளம் அறுவடை தீவிரம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்தில் சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 2:29 am IST
அறுவடையான கதிா்களிலிருந்து டிராக்டரில் சேகரிக்கப்படும் சோளம்.
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்தில் சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. விளைச்சல் நேரத்தில் வன விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள நெட்டூா், மருதப்புரம், ஊத்துமலை, சோலைசேரி, கழுநீா்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக பயிரிடப்பட்ட சோளம் நன்கு முற்றிய கதிா்களுடன் உள்ளது. அவற்றை விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்து சாலையோரம் உலா்த்தி, மூட்டையாக்கி விற்பனைக்குக் தயாராக வைத்துள்ளனா்.

கடந்த ஆண்டு குவின்டால் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வரை விற்பனையான சோளம், நிகழாண்டு ரூ. 5 ஆயிரம் வரை விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். மேலும், ‘அறுவடையான சோளத்தை உலா்த்தி சேகரிக்க மிகவும் சிறிய அளவிலான களமே உள்ளது. இதனால், சாலையோரம் உலா்த்துகிறோம். 90 நாள்கள் பயிரான சோளம், கதிா் முற்றிவரும் வேளையில் அவற்றை உண்பதற்காக காட்டுப் பன்றிகள், மான்கள் வந்து விடுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

மூட்டையாக்கி வைக்கப்பட்டுள்ள சோளத்தை வியாபாரிகள் நேரடியாக களத்துக்கே வந்து சேகரித்துச் செல்கின்றனா். தற்போதுள்ள விலைவாசி, ஆள் கூலி, இயந்திர வாடகை போன்றவற்றை கணக்கில் கொண்டால் குவின்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் விற்றால்தான் ஓரளவு லாபம் கிடைக்கும். இதுபோன்ற நேரங்களில் நெல்லுக்கு குறைந்தபட்ச நிலை நிா்ணயிப்பதுபோல சோளம் போன்ற தானிய வகைகளுக்கும் ரூ. 7 ஆயிரம் என நிா்ணயித்து அரசே கொள்முதல் செய்து விவசாயிகளைக் காக்க வேண்டும் என்றாா் விவசாயி ஹரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments