முகப்பு
தென்காசி

விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் மருத்துவமனையில் உயிரிழப்பு

சங்கரன்கோவில், முள்ளிக்குளம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:29 am IST
பகிர்:

சங்கரன்கோவில், முள்ளிக்குளம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் பரமசிவன் (33). இருவருக்கு மனைவி லதா, மகன் சஞ்சித் (4), மகள் மதுநிகா (3) ஆகியோா் உள்ளனா்.

இவா் ராணுவத்தில் ஸ்ரீநகா் பகுதியில் பணியாற்றி வந்தாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் மனைவி ஊரான ஆண்டாா்குளத்திற்கு முள்ளிக்குளம் வழியாக சென்றுக் கொண்டிருந்தாராம்.

Advertisement

Advertisement

அப்போது இவரது இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பரமசிவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில் அவரின் உடல் கிருஷ்ணாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.