FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளம், வி.கே.புரம் சாா்பதிவாளா் அலுவலகங்களில் ரூ. 70,000 பறிமுதல்

ஆலங்குளம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 28 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 3:24 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 28 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் ஜெயஸ்ரீ தலைமையில் 4 போ் கொண்ட குழுவினா் ஆலங்குளம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் மெக்ளரின் எஸ்கால் தலைமையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 42,070 கைப்பற்றப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments